ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு. 
இந்தியா

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

மும்மொழிக் கொள்கை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து...

DIN

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

”முந்தைய ஆந்திர அரசு ஆங்கிலத்தை மட்டுமே ஊக்குவித்தது. ஆங்கிலம் மட்டும்தான் வாழ்வாதாரம் என்ற வகையில் ஊக்குவித்து வந்தது. ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி மூலம்தான் கிடைக்கும்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உலகளவில் பிரசித்து பெற்று வருகின்றன. மக்களுடன் எளிதில் பழகுவதற்கு ஹிந்தியை கற்றுக் கொள்வது நல்லதுதான்.

ஆந்திரத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஐந்து முதல் பத்து மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மூன்று மொழிகள் அல்ல, பல மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன். அதனை படித்து மாணவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று வேலை செய்து பயன்பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT