கோப்புப்படம்.  
இந்தியா

தில்லி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

தில்லி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்(சிஐஎஸ்எஃப்) தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தில்லி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்(சிஐஎஸ்எஃப்) தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கிரண்(37), பணியில் இருந்தபோது காலை 8.44 மணிக்கு தனது சர்வீஸ் பிஸ்டலால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திலிருந்து எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிரண் தனது சர்வீஸ் பிஸ்டலைப் பயன்படுத்தி விமான நிலையத்தின் டெர்மினல்-3 இல் உள்ள கழிப்பறைக்குள் தற்கொலை செய்து கொண்டார் என்று அவர் கூறினார்.

சட்டவிரோத சுரங்க வழக்கில் கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் விடுவிப்பு!

சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்தன. தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதாக அவர் கூறினார்.

உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT