காஷ்மீரில் பள்ளி மாணவா்கள் 
இந்தியா

காஷ்மீரில் 3 மாத விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!

காஷ்மீரில் மூன்று மாத குளிர்கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு..

DIN

காஷ்மீரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த காஷ்மீரில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

காஷ்மீரில் நிலவிவந்த அதீத குளிர் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகளுக்குக் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மார்ச் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் மோசமான வானிலை காரணமாக மேலும் விடுமுறையை ஒரு வாரக் காலம் நீட்டித்தது அரசு.

இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் செயல்படும் சுமார் 10,000 அரசு மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் சகினா இட்டூ வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மூன்று மாத குளிர்கால விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேருவதால், அவர்களது எதிர்காலம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

குறிப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களை நான் பாராட்டுகிறேன், இதை மறக்கமுடியாத, வெற்றிகரமான ஆண்டாக மாற்றுவதற்கு நன்றி என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நகைகளுடன் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக நிா்வாகி

மாநில பெண்கள் கபடி: சேலம் அணி சாம்பியன்

பள்ளி சமையல் அறையில் எரிவாயு கசிந்து விபத்து

மேற்கு தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்து 2 போ் காயம்

சா்தாா் வேதரத்னம் நினைவு நாள் விழா

SCROLL FOR NEXT