ரேகா குப்தா  PTI
இந்தியா

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

DIN

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில்லி அரசு சார்பில் கெளரவிக்கப்பட்டனர். முதல்வர் ரேகா குப்தாவும் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஆகியோர் விருது வழங்கினர்.

ஜம்மு - காஷ்மீரின் முதல் பெண் கார் ரேஸர் ஹுமாரியா முஷ்டேக், மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான், குடும்ப வன்முறையில் இருந்து மீண்டுவந்த ஸ்வீட்டி மேத்தா, குடும்பப் பிரச்னையில் சிக்கிய பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் ரேகா ஜிந்தால், குடிசைப் பகுதிகளில் கணினி கற்றுத்தரும் பணியில் ஈடுபட்டு வரும் நளினி, மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை கஞ்சன் லக்கானி, சமூக சேவகர் நீது செளத்ரி உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெண்களின் இருசக்கர வாகனப் பேரணியும் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ரேகா குப்தா கல்லூரிப் பருவ காலங்களில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திக்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார்..

பெண்களில் இருசக்கர வாகனப் பேரணி, அவர்களின் வலுவை வெளிப்படுத்துவதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளரந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

சில பகுதிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உழைப்பே அதிகம் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது எனவும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ உதவியுடன் உறவினரின் குரலில் வரும் மோசடி அழைப்பு! எச்சரிக்கை!!

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் கைது

10 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

சிம்லாவில் வீரபத்ர சிங்கின் சிலை திறப்பு: காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு!

மாரி செல்வராஜுக்காக 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன்: துருவ்

SCROLL FOR NEXT