இந்தியாவில் குளியல் சோப்கள் விலையை உயர்த்த முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக சோப் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தங்கள் பிரான்ட் குளியல் சோப்களின் விலையை உயர்த்த ஹிந்துஸ்தான் யூனிலீவர்(டவ் சோப்), கோத்ரேஜ் கன்ஸ்யூமர்( சிந்தால்) உள்ளிட்ட பல முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனினும், விலையேற்றம் உடனடியாக அமலுக்கு வராதென நிறுவனங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.