லலித் மோடி(கோப்புப்படம்) 
இந்தியா

லலித் மோடியின் வானுவாட்டு பாஸ்போர்ட் ரத்து! இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா?

லலித் மோடியின் வானுவாட்டு பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வானுவாட்டு தீவில் தஞ்சமடைந்திருந்த லலித் மோடியின் கடவுச்சீட்டை ரத்து செய்ய அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபட் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் மோசடியில் குற்றச்சாட்டில் தொடர்புடைய தொழிலதிபர் லலித் மோடி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், வானுவாட்டு தீவில் தஞ்சமடைந்த லலித் மோடி, அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், லலித் மோடியின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “லலித் மோடி குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தபோது நடத்தப்பட்ட அனைத்து நிலையான பின்னணி சோதனைகள், இன்டர்போல் குற்றப்பின்னணியின் எந்த குற்றவியல் தண்டனையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் லலித் மோடி குறித்து எச்ச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய அதிகாரிகள் இன்டர்போலிடம் கோரிக்கை வைத்திருப்பது குறித்த தகவல் எனக்கு கிடைத்தது.

அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இத்தகைய எச்சரிக்கையின் காரணமாக அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய லலித் மோடி, தனது இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில், வானுவாட்டு தீவின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் லலித் மோடி சிக்கலில் மாட்டியுள்ளார். அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை இந்திய அதிகாரிகள் முன்வைக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT