80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்ச் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 தலைவர் சோனியா காந்தியின் சிந்தனையில் உருவானது என்று காங்கிரஸ் உறுப்பினர் பிரணிதி ஷிண்டேவின் கருத்துக்கு மத்திய உணவு அமைச்சர் பதிலளித்தார்.
தேர்தலுக்காக மட்டுமே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் காங்கிரஸ் 2013இல் கொண்டு வந்தது. இது சீரற்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் விதிகள் கூட வகுக்கப்படவில்லை என்று ஜோஷி கூறினார்.
2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது, ஏழைகளின் வலியைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு இலவச உணவு தானியங்களை உறுதி செய்வதற்கான முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டதாக அவர் கூறினார்.
நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களைப் பிரதமர் மோடி வழங்கி வருகிறார். ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மோடி அரசு மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. இதன் கீழ் ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டில் எங்கும் இலவச உணவு தானியங்களைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.