ரன்யா ராவ் 
இந்தியா

கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

DIN

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகளுமான ரன்யா ராவ் (33), துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது, பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார்.

கடந்த ஓராண்டில் பல்வேறு நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருப்பதும், துபைக்கு அடிக்கடி சென்றுவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இலங்கை: ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் பெங்களூரு மத்திய பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பெங்களூருவில் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ரன்யா தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் மார்ச் 12 விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் ரன்யாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT