விபத்துக் காப்பீடு Center-Center-Chennai
இந்தியா

என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே.. காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்குமா?

என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே, விபத்தில் மரணமடைபவர் குடும்பத்துக்கு காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்கும்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஒருவர் வைத்திருக்கும் வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் கார்டுக்கே ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பது சிலருக்குத் தெரிந்த, பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.

தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் அட்டை பயன்படுத்திக் கொண்டிருந்த நபர், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைய நேர்ந்தால், அவரது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு பெற முடியும் என்கிறது ஆர்பிஐ விதிமுறை.

ஆனால், இந்த காப்பீட்டுத் தொகையான வங்கிக்கு வங்கியும், ஏடிஎம் அட்டையின் வகையின் அடிப்படையிலும் மாறுபடுகிறது.

அனைத்து வங்கிகளுமே, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்குகிறது. அது வெறும் பணம் எடுக்க மட்டுமே பயன்படுகிறது என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால், வங்கி ஏடிஎம் வைத்திருப்பவர் விபத்தில் மரணமடைய நேர்ந்தாலோ அல்லது நிரந்தரமாக ஊனமடைந்தாலோ காப்பீட்டுத் தொகை பெற முடியும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், கோடக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்தக் காப்பீட்டு வசதியை வழங்கி வருகிறது.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கார்டின் வகையைப் பொருத்து விமான விபத்து அல்லது விமான விபத்து அல்லாத விபத்துகளில் பலியாகும் நபர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

ஆனால், விபத்து நேரிட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒருவேளை விமான விபத்தில் பலியாகியிருந்தால், அந்த விமான டிக்கெட், அவரது ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்தி எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் இருக்கின்றன.

எஸ்பிஐ பிளாட்டினம் கடன் அட்டை வைத்திருப்பவர்கள், விபத்தில் நிரந்தர ஊனம் அடைந்தாலும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT