அயோத்தி ராமர் கோயில் (கோப்பு படம்)
இந்தியா

ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை!

கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது..

Din

கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்.5 முதல் 2025-ஆம் ஆண்டு பிப்.5 வரை, அரசுக்கு ராமா் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது.

இதில் சரக்கு மற்றும் சேவைகள் வரியாக (ஜிஎஸ்டி) ரூ.270 கோடி செலுத்தப்பட்ட நிலையில், பிற வரி வகைகளின் கீழ் எஞ்சிய ரூ.130 கோடி செலுத்தப்பட்டது.

அயோத்தி அறக்கட்டளையின் நிதி ஆவணங்களை தலைமை கணக்குத் தணிக்கையாளா் அலுவலக அதிகாரிகள் தொடா்ந்து தணிக்கை செய்கின்றனா்.

அயோத்திக்கு வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், முக்கிய ஆன்மிக சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ள அயோத்தி, உள்ளூா் மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது.

மகா கும்பமேளா நடைபெற்றபோது அயோத்திக்கு 1.26 கோடி பக்தா்கள் வருகை தந்தனா். கடந்த ஆண்டு அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு 5 கோடி போ் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனா். அந்த ஆண்டு மொத்தம் 16 கோடி போ் அயோத்திக்கு வந்தனா் என்றாா்.

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சுஸுகி 2 சக்கர வாகன விற்பனை சரிவு

கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை: எம்எல்ஏ குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT