கோப்புப்படம்.. 
இந்தியா

கோடை வெய்யிலை தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம்! காலை 6.30 முதல் 10.30 மணி வரை மட்டும்!

ஒடிசாவில் கோடை வெய்யிலை தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவு...

DIN

ஒடிசாவில் கோடை வெய்யிலை தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படும் வெப்ப அலைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளைக் காப்பதற்காக தமிழகத்தில் மே மாதம் முழுவதும் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

அதேபோல, மார்ச் மாதத் தொடக்கத்திலேயே வெய்யிலின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த நிலையில், ஒடிசாவில் வெப்ப அலைகளில் மாணவர்கள் காப்பதற்காக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி நேரம் காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்றுமுதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர் தேவை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில், பள்ளி வளாகத்திற்குள் உள்ள ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வைக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை உறுதி செய்ய அனைத்து பெற்றோர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது போதுமான அளவு விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பள்ளி நேரங்களில், வெப்ப அலை குறித்து முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வானிலை நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து பள்ளி நேரத்தை மாற்றியமைக்கவும் பள்ளிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்! இந்த வாரம் 5 தமிழ் படங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT