FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்

Updated On : 22 மார்ச் 2025, 9:35 am IST
யஷ்வந்த் சர்மா - கோப்புப் படம்
பகிர்:

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவை யாவும் வதந்தி என்றும் கூறினர்.

இந்த நிலையில், யஷ்வந்த் சர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே. உப்த்யாய் அறிக்கை சமர்ப்பித்ததாகவும் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்ற கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடங்கலாம்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இந்த நிலையில், தில்லியிலுள்ள அவரது வீட்டில் கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தின்போது, அந்த வீட்டிலுள்ள ஓர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

தீ விபத்து நேரிட்டபோது சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக் கட்டுகள் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. அவர் வீட்டில், மொத்தம் ரூ. 37 கோடி அளவில் பணம் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, தில்லியிலிருந்து நீதிபதி வர்மா அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் சம்மதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, யஷ்வந்த் சர்மா வீட்டில் பணம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தில்லி தீயணைப்புத் துறை விளக்கமளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments