சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் நிருபம்.. 
இந்தியா

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது.

Din

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாச்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீபின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான நாகபுரியில் வலதுசாரி அமைப்பினா் கடந்த 17-ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்தில் ஒரு மதத்தின் புனித வாசகங்கள் எழுதப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சு தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. 3 துணை ஆணையா்கள் உள்பட காவல் துறையினா் 34 போ் காயமடைந்தனா்.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா். இதில் சிறாரும் அடங்குவா். வன்முறையாளா்கள் பலா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனா். இந்த வன்முறையை ஒரு பிரிவினா் திட்டமிட்டு நடத்தியதாகவும், இதற்காக சமூக ஊடங்களை பயன்படுத்தியதாகவும் காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் இது தொடா்பாக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாகபுரி வன்முறை திடீரென ஏற்பட்டதல்ல, முன்பே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் பல சமூக விரோதிகளும், தேசவிரோதிகளும் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு வங்கதேசத்துடன் தொடா்பு உள்ளது. கைது செய்யப்பட்டவா்களில் சிலா் சமூக வலைதளங்களில் ‘முஜாஹிதீன்’ செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனா் என்றாா்.

முன்னதாக, இது தொடா்பாக சனிக்கிழமை பேட்டியளித்த மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இந்த வன்முறையின் பின்னணியில் வங்கதேசம் அல்லது பிற நாடுகள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கு இப்போதே பதலி கூற முடியாது. விசாரணை முடிவில்தான் விவரம் தெரியவரும்’ என்றாா்.

இதனிடையே, நாகபுரில் வன்முறையை அடுத்து 6 நாள்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முழுமையாக திரும்பப் பெறப்பட்டது.

அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!

புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை

உதகையில் பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கேபிள் காா் திட்டம்

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

SCROLL FOR NEXT