இணையமைச்சா் பங்கஜ் சௌதரி 
இந்தியா

வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களின் விளம்பர வருவாய் மீது விதிக்கப்படும் ‘டிஜிட்டல் வரி’ ரத்து

இந்தியாவில் விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 6 சதவீத டிஜிட்டல் வரி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

Din

புது தில்லி: வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களான கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்டவை இந்தியாவில் விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 6 சதவீத டிஜிட்டல் வரி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி 59 திருத்தங்கள் அடங்கிய நிதி மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா். அதில் டிஜிட்டல் வரியை ரத்து செய்யும் திருத்தமும் இடம் பெற்றுள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டு இணையவழி நிறுவனங்கள் நமது நாட்டில் விளம்பரம் மூலம் ஈட்டும் வருவாய் மீது கடந்த 2016 ஜூன் முதல் விதிக்கப்பட்டு வந்த டிஜிட்டா் வரி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் விளம்பரம் செய்யும் உள்நாட்டு நிறுவனங்களும் அதிக பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களில் சற்று குறைந்த செலவில் விளம்பரங்கள் வெளியிட முடியும்.

அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக வரிவிதிப்பதால் இந்திய பொருள்கள் மீதும் அமெரிக்கா அதிக வரி விதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். டிரம்ப்பின் அறிவிப்பு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த டிஜிட்டல் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பை இந்தியா கணிசமாக குறைக்கும் என்று டிரம்ப் அண்மையில் நம்பிக்கை தெரிவித்திருந்தாா். அதே நேரத்தில் இந்தியா மீது அமெரிக்க அதிகரிப்பதாக அறிவித்துள்ள வரியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவா் கூறினாா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT