ஹிசார் பகுதியில் புதிய விமான நிலையத்தை திறந்துவைப்பதற்காக ஏப். 14ஆம் தேதி ஹரியாணா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தப் பயணத்தில் 800 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் நயாப் சிங் சைனி,
''டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் மாநில நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தில் ஹரியாணா மக்களுக்கு பிரதமர் மோடி சில பரிசுகளை வழங்கவுள்ளார். ஹிசார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
மின் துறையில் மாநிலத்தை முக்கியத்துவம் பெறச் செய்யும் வகையிலும் உள்ளூர் வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் ஹிசார் பகுதியில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
யமுனா நகர் மாவட்டத்தில் ரூ. 7,272 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டப்படவுள்ள தீன் பந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இது 800 மெகா வாட் திறன் கொண்டது'' எனப் பேசினார்.
இதையும் படிக்க | நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: வெளியானது அறிவிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.