யோகி ஆதித்யநாத் | ராகுல் காந்தி 
இந்தியா

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது...

DIN

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரை' (ஒற்றுமை நடைப்பயணம்) என்பது 'பாரத் தோடோ யாத்திரை'. அதாவது இந்தியாவைப் பிரிக்கும் பிரசாரம்.

ராகுல் காந்தி, வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவை விமர்சிக்கிறார். இந்த நாட்டு மக்களுக்கு அவரின் நோக்கங்கள் என்னவென்று தெரியும்.

பாஜகவைப் பொருத்தவரை ராகுல் காந்தி போன்ற சில 'சோதனை மாதிரிகள்' இருப்பது, கட்சியின் தெளிவான பாதையை உறுதிசெய்ய உதவுகிறது. பாஜகவின் பாதையை தெளிவுபடுத்த ராகுல் காந்தி உதவுகிறார்.

அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் வேண்டுமென்றே சில பிரச்னைகளை பெரிதாக்குகிறது. அயோத்தி ராமர் கோயில், முத்தலாக் தடைச் சட்டம், நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

காங்கிரஸ் ஏன் முத்தலாக்கை ஒழிக்கவில்லை? ஏன் கும்பமேளாவை ஊக்குவிக்கவில்லை? காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்க ஏன் தவறவிட்டது? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டிய யோகி, தேர்தல் முடிவைத் திசைதிருப்பும் முயற்சியில் சர்ச்சைக்குரிய அமெரிக்க ஹெட்ஜ் நிதி கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடமிருந்து காங்கிரஸ் நிதி பெற்றது தேசத்துரோகத்திற்கு ஒப்பானது என்று விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

மராத்திய இளவரசி... ரிங்கு ராஜ்குரு!

இந்திய துரோகியா? பக்தனா? வெளியானது மம்மூட்டி - மோகன்லால் பட டீசர்!

திருவொற்றியூரில் காந்தி ஜெயந்தி விழா!

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் உதவியால் ரன்கள் குவித்தேன்: ஷுப்மன் கில்

SCROLL FOR NEXT