முகப்பு
இந்தியா

எல்லைப் பிரச்னை: இந்தியாவுடன் இணைந்து தீா்வு காண சீனா விருப்பம்

எல்லைப் பிரச்னைக்கு இந்தியாவுடன் இணைந்து தீா்வு காண சீன ராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 மார்ச், 2025 at 8:50 PM
கோப்புப் படம்
பகிர்:

எல்லைப் பிரச்னைக்கு இந்தியாவுடன் இணைந்து தீா்வு காண சீன ராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைக் கோடு பகுதியில் படைகளைத் திரும்பப் பெறும் பணிகள் குறித்து சீன ராணுவத்தின் செய்தித் தொடா்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘எல்லைப் பிரச்னைக்கு நியாயமான தீா்வு காண சீன ராணுவம் விரும்புகிறது. இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சீன ராணுவம் தயாராக உள்ளது’ என்றாா்.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், படைகளைத் திரும்பப் பெற கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன. அதன்பிறகு, ரஷியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்துக் கொண்ட பிறகு இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.