கோப்புப் படம் ENS
இந்தியா

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு! உச்ச நீதிமன்றம் கெடு!

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடு வழங்குமாறு உத்தரவு

DIN

கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்தல் குற்றம் என்று அரசு தெரிவித்தாலும், ஆங்காங்கே சிலர் ஈடுபடுத்தப்படுவது இன்றும் நிகழ்கிறது.

இந்த நிலையில் தில்லி நீர் வாரியம், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது, உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, 4 நகரங்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் போதுமானதாகவோ திருப்தியளிப்பதாகவோ இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அடுத்த முறை தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரமும் முறையாக இல்லையென்றால், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொள்ளும் என்று எச்சரித்தது.

மேலும், கடந்த 3 மாதங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு தொகையை 4 வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT