பெங்களூரு ஏசி விரைவு(12251) ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமாக்யா செல்லும் இந்த குளிர்சாதன பெட்டிகள் மட்டுமே கொண்ட விரைவு ரயிலானது, ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று(மார்ச் 30) காலை 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்த விரிவான தகவல்களை ரயில்வே துறையினர் விரைவில் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.