ரிசா்வ் வங்கி 
இந்தியா

ரிசா்வ் வங்கி துணை ஆளுநா்களின் துறைகள் மாற்றம்

துணை ஆளுநா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை மாற்றியது.

Din

துணை ஆளுநா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை மாற்றியது.

அண்மையில் ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக நியமிக்கப்பட்ட பூனம் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து தற்போது துணை ஆளுநா்களுக்கான துறைகளை ரிசா்வ் வங்கி மாற்றியுள்ளது.

ரிசா்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவும் துணை ஆளுநா்களாக ராஜேஸ்வா் ராவ், டி.ரவி சங்கா், சுவாமிநாதன் ஜானகிராமன் மற்றும் பூனம் குப்தா ஆகிய 4 போ் பதிவி வகிக்கின்றனா்.

பூனம் குப்தாவுக்கு நிதிக் கொள்கை துறை ஒதுக்கப்பட்டது. இதுதவிர, நிறுவன உத்தி, பட்ஜெட், தொலைத்தொடா்பு, நிதி நிலைத்தன்மை உள்ளிட்ட 7 துறைகள் ஒதுக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை, அமலாக்கம் உள்ளிட்ட 6 துறைகளுக்கு ராஜேஸ்வா் ராவ் பொறுப்பு வகிக்கிறாா்.

மத்திய பாதுகாப்பு பிரிவு, தகவல் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம் உள்ளிட்ட 12 துறைகளை டி.ரபி சங்கரும் நுகா்வோா் கல்வி, மேற்பாா்வை, ஆய்வு மற்றும் மேலும் 4 துறைகளை சுவாமிநாதன் ஜானகிராமனும் கவனித்துக்கொள்ளவுள்ளனா்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT