பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கோப்புப் படம்
இந்தியா

பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதியை முடக்கும் இந்தியா?

பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்

DIN

பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவிருக்கும் நிதி மற்றும் கடன்களை மறுபரிசீலனை செய்ய சர்வதேச நாணய நிதியம் உள்பட உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இந்தியா கோரிக்கை விடுக்கவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு பொதுத்துறை கடன்கள், மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் என மொத்தம் 43.4 பில்லியன் டாலர்களை வழங்கிய ஆசிய மேம்பாட்டு வங்கியிடமும், காலநிலை பின்னடைவு கடன் திட்டத்தின்கீழ், 1.3 பில்லியன் டாலர் அளிக்கும் சர்வதேச நாணய நிதியத்திடமும் மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க 320 மில்லியன் டாலர் வழங்கவும் ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதியளித்திருந்தது.

இந்த நிதியுதவி குறித்தும், பாகிஸ்தானுக்காக 20 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் குறித்தும் மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரிக்கை விடலாம் என்றும் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT