பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியர்கள் மூவர் பலி!
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பலியாகினர்.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பரிதாபமாக பலியாகினர்.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மூன்று அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.