ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்வதாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்வதாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் பதான்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான செய்தி வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை வெறும் மிகச்சிறிய முன்னோட்டம்தான்.
வெறும் 4 நாள்களில், அவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு, போரை நிறுத்துமாறு எங்கள் ராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநரிடம் பேசச் சொன்னார்கள். இந்தப் போர் வெறும் பயிற்சிதான்.
Advertisement
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. சிந்தூரின் இரண்டாவது நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் மிகவும் விரிவானவை. சிந்தூர் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது.
ஏனெனில், அது நம் எதிரிக்கு எவ்வளவு சேதத்தைத் தரப் போகிறோம் என்பதைப் பொறுத்தது. அது நிலம், கடல் அல்லது வான் வழியாக இருந்தாலும் சரி- அதனைச் செயல்படுத்த எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் பேசுகையில், "இந்தியாவின் பதில் கடந்த முறையைவிட கடுமையானதாகவும் வலுவானதாகவும் இருக்கும். ஆபரேஷன் சிந்தூரில் அவர்களின் (பாகிஸ்தான்) அனைத்து பயங்கரவாதத் தளங்களையும் தாக்கினோம். பதிலுக்கு அவர்கள் தாக்குதல் நடத்தினர். இருப்பினும், பதிலடியாக நாங்கள் அவர்களின் ராணுவத் தளங்களையும் விமான தளங்களையும் அழித்தோம்.
இதன் பின்னர்தான், போரை நிறுத்துமாறு அவர்கள் கோரினர். போரை நிறுத்துமாறும் எங்களிடம் மட்டுமின்றி, பிற நாடுகளிடமிருந்தும் கோரினர்" என்று தெரிவித்தார்.