அமித் ஷா.. பிடிஐ
இந்தியா

நமது ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம்! - அமித் ஷா

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

நமது ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்றும், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நமது ஆயுதப்படைகளை நினைத்து பெருமை கொள்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் என்பது பஹல்காமில் கொல்லப்பட்ட நமது சகோதரர்களுக்கான நமது நாட்டின் பதிலடியாகும்.

இந்தியா மற்றும் நாட்டு மக்களின் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு தகுந்த பதிலடி கொடுக்கும். மேலும், பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்து ஒழிப்பதில் நமது இந்தியா உறுதியாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

முதல்முறையாக ஆஸ்கருக்கு தேர்வான பப்புவா நியூ கினிய திரைப்படம்! பா.இரஞ்சித் தயாரிப்பு!

இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? - முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை! முழு விவரம்

SCROLL FOR NEXT