கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங்.  
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புப் படையின் இரு பெண் அதிகாரிகள் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருவது பற்றி...

DIN

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாதுகாப்புப் படையில் இரு பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பேசி வருகின்றனர்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோரின் பெயர்கள் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகின்றது.

இவர்கள் இருவரும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை தேர்வு செய்தது தொடர்பாக விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு வருகின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்திய விமானப் படையின் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாக்கி: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா..!

“இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருந்தது...” -புஜாராவைப் பாராட்டிய பிரதமர் மோடி!

வீட்டுக்கொருவர் ஐ.ஏ.எஸ். அலுவலர்!

ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

அமெரிக்க வரி ஏதிரொலி: நிவாரணம் நாடும் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள்!

SCROLL FOR NEXT