இந்தியா

மாநில முதல்வர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!

இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை

DIN

இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவத்தின் இந்த பதில் தாக்குதலையடுத்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பலரும் இதுதொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு - காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுடன் அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT