இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: 27 விமான நிலையங்கள் மூடல், 400 விமானங்கள் ரத்து!

நாடு முழுவதும் 27 விமான நிலையங்களும், 400-க்கும் மேற்பட்ட விமானங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

DIN

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிவருவதையடுத்து நாடு முழுவதும் 27 விமான நிலையங்களும், 400-க்கும் மேற்பட்ட விமானங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22ல் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் நாட்டை உலுக்கிய நிலையில், தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றது.

ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மறைவிடங்களைக் கண்டுபிடித்து இந்திர ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 13 பேர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவின் வடக்கு மேற்குப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 10 காலை 5.29 மணி வரை இந்த தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா் உள்பட 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஆகாசா, ஏா் இந்தியா, இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தனது விமான சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. முன்னதாக முன்பதிவு செய்தவர்களுக்குக் கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

SCROLL FOR NEXT