இந்தியா

போர்ப் பதற்றம்: மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்கள் விடுப்பு ரத்து!

போர்ப் பதற்றம்: மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் விடுப்பு ரத்து.

DIN

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக மேற்கு வங்க அரசு அனைத்து அரசுப் பணியாளர்களில் விடுமுறைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை அனைத்து மாநில அரசு ஊழியர்களின் விடுமுறைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு அனைத்து வகை மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும், மேலும் முன்னர் விடுப்பு எடுத்தவர்கள்கூட இப்போது பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பில் உள்ள ஊழியர்கள் மட்டுமே இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்துள்ள நிலையில், அத்தியாவசிய மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்யவும் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குக்கு பாகிஸ்தான் ராணுவ மரியாதை: விக்ரம் மிஸ்ரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT