இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அரசாங்கம் தரப்பில் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு இந்த நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் நிர்வாக உத்தரவினை ஏற்று இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் வலைத்தள கணக்குகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.