இந்தியா

ஜம்மு விமான நிலையத்தை தாக்க முயன்ற பாகிஸ்தானின் எஃப்-16! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவத்தைப் பற்றி..

DIN

பாகிஸ்தான் விமானப் படையில் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஜேஎஃப்-17 விமானங்கள் தாக்கப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

ஜம்மு, ஆர்.எஸ்.புரம், சானி ஹிமாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் உள்ள ராணுவ மற்றும் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பல ஏவுகணை தாக்குதலை நடத்தியது. எஸ்.400 மற்றும் ஆகாஷ் ஆகிய போர் விமானங்கள் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்தின. இந்தியா மொத்தமாக 8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது.

சர்கோதாவிலிருந்து பாகிஸ்தான் போர் விமானம் எஃப்-16 புறப்பட்டு ஜம்மு நோக்கி வந்து ஜம்மு விமான நிலையத்தைத் தாக்கும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஜம்மு மட்டுமல்ல, பாகிஸ்தானின் ட்ரோன்களும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மீது தாக்குதல் நடத்த முயன்றபோது, இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு நிலைமை பாதுகாக்க இந்தியப் பாதுகாப்பு படைகள் முழு விழிப்புடன் உள்ளன. இதற்கிடையில், ஜம்மு, ஆர்.எஸ். புரம், அமிர்தசரஸ், பூஞ்ச், ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT