பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்.  Photo Credit: ANI
இந்தியா

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

DIN

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து முப்படை தளபதிகளுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 இடங்களில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.

யெஸ் வங்கியின் 13% பங்குகளை விற்பனை செய்த எஸ்பிஐ!

இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா உறுதிப்படுத்தியிருந்தது. எனினும், ஜம்மு-காஷ்மீா் எல்லையில் மோதலைத் தீவிரப்படுத்தி, மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் தொடா்ச்சியாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர மாநிலங்களை வான்வழியாகத் தாக்கும் பாகிஸ்தான் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

கடல் பயணம்... கௌரி வினீத்!

ஒவ்வொரு பார்வையிலும் கம்பீரம்... ரூமா சர்மா!

SCROLL FOR NEXT