பதுங்கு குழி - கோப்புப்படம் 
இந்தியா

பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்த ஜம்மு மக்கள்; மின்சாரம் துண்டிப்பு!

ஜம்மு மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலையடுத்து, ஜம்மு எல்லைப் பகுதி மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக, அப்பகுதி மக்கள் பதுங்கு குழிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர்ப்பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியபோதே, ஜம்முவில் இருந்த பதுங்கு குழிகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் நடந்து வரும் தாக்குதல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுளள்து.

போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தான் தாக்குதல், பதிலடி தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மா, தங்கையிடம் இப்படிச் சொல்வார்களா? ராதிகா ஆப்தேவின் கசப்பான அனுபவம்!

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT