பிரதமர் மோடி.  
இந்தியா

போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சேவையின் கொள்கைகளை முன்னேற்றுவதில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமைத்துவம் தொடங்குகிறது.

நமது பகிரப்பட்ட மதிப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக, புனித ரோம் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்ந்து உரையாடலுக்கும், ஈடுபாட்டிற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் நேற்று அறிவித்தது.

ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை

ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தில் 133 கார்டினால்களும் சேர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுத்தனர். போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

புதிய போப் இனி 14 ஆம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் தேதி காலமான நிலையில் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT