இந்தியா

எஸ்-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை! - இந்திய ராணுவம்

எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்துக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்திருப்பதைப் பற்றி...

DIN

எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்துக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு எந்தவித சமரசமும் இன்றி துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில் ஜே.எஃப்-17 போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் ஆதம்பூரில் இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பான சுதர்சன் சக்ராவை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறான தகவல் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் விமானப்படையின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆதம்பூரில் உள்ள எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தானில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தியாவின் பஞ்சாபில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 தண்டர் ஜெட் அழித்ததாக சீன செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து மீண்டும் பாகிஸ்தான் பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

இல.கணேசன் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல்!

சதுரங்கப் போட்டியில் வெற்றி: அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT