பிரதமர் மோடி - அஜித் தோவல் கோப்புப்படம்.
இந்தியா

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் சந்திப்பு

போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடியை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.

DIN

போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து தில்லியில் பிரதமர் மோடியை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இந்த ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 3 நாள்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் நிலவி வந்தது.

போரை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் சம்மதம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார். அதனை இந்திய தரப்பும் பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பது குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.

அதேபோல் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தாரும், உடனடியாக போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும்-பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 3 நாள்களாக எல்லையில் நிலவி வந்த பதற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமல்! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT