இந்தியா

பார்மர் மாவட்டத்துக்குச் சிவப்பு எச்சரிக்கை: பொது இடங்களில் கூடத் தடை!

போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பார்மர் மாவட்டத்துக்கு அதிரடி உத்தரவு..

DIN

ஆபரேன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. விமானம், ஏவுகணை, ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதன் காரணமாக எல்லையோர மாவட்டங்களில் இரவு நேரங்களில் மின் விளக்குகளை அணைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம் உயர் சிவப்பு எச்சரிக்கை என்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளின் பாகங்கள் சிதைந்துள்ளதாகப் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அந்த மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

பார்மர் மாவட்டம் அதி சிவப்பு எச்சரிக்கை என்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

போர்ப் பதற்றம் காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சந்தை, பொது இடங்களில் மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதோ, பொது இடங்களில் கூடுவதோ செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT