சிபிஎஸ்இ 10ம் வகுப்பு: மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கான மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்..
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.
அதன்படி, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 10ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 1.30 மணியளவில் வெளியானது.
Advertisement
Advertisement
மண்டல வாரியாக திருவனந்தபுரம் 99.79 சதவீதம் பெற்று முதலிடத்திலும். விஜயவாடா 99.79 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், பெங்களூரு - 98.90 சதவீதம் பெற்று மூன்றாமிடத்திலும், சென்னை - 98.71 பெற்று நான்காம் இடத்திலும் உள்ளன.
கடந்த 2024-ல் 25,724 பள்ளிகளில் 7,603 தேர்வு மையங்களிலும், 2025ஆம் ஆண்டில் 26,675 பள்ளிகளில் 7,837 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது. அதில் 2024ல் தேர்வுக்கு 2,25,1812 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2,23,8,827 பேர் தேர்வெழுதினர். அதில் 2,095,467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 93.60 சதவீதமாகும்.
2025ஆம் ஆண்டில் தேர்வுக்கு 2,38,5079 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2,37,1939 பேர் தேர்வெழுதினர். அதில் 2,22,1636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 93.66 சதவீதமாகும். அதாவது 2024-2025 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 0.06 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2025ல் மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்
திருவனந்தபுரம் - 99.79
விஜயவாடா - 99.79
பெங்களூரு - 98.90
சென்னை - 98.71
புணே - 96.54
அஜ்மீர் - 95.44
மேற்கு தில்லி - 95.24
கிழக்கு தில்லி - 95.07
சண்டீகர் - 93.71
பஞ்ச்குலா - 92.77
போபால் - 92.71
புவனேஸ்வர் - 92.64
பாட்னா - 91.90
டேராடூன் - 83.45
பிரயாக்ராஜ் - 79.53
நொய்டா - 81.29
குவஹாத்தி - 83.62
மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
இதையும் படிக்க: குருப்பெயர்ச்சி பலன்கள் 2025