சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 
இந்தியா

சிபிஎஸ்இ மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியாகியுள்ள நிலையில் மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்..

DIN

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியாகியுள்ள நிலையில் மொத்தம் 83.39 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதியும் நிறைவடைந்தது.

இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களை விட 5.94 சதவீத மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2024-ல் 18,417 பள்ளிகளில் 7,126 தேர்வு மையங்களும், 2025ஆம் ஆண்டில் 19,299 பள்ளிகளில் 7,330 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது. அதில் 2024ல் தேர்வுக்கு 1633730 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 1621224 பேர் தேர்வெழுதினர். அதில் 1426420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 87.98 சதவீதமாகும்.

2025ஆம் ஆண்டில் தேர்வுக்கு 1704367 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 1692794 பேர் தேர்வெழுதினர். அதில் 1496307 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 88.39 சதவீதமாகும்.

அதாவது இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 0.41 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2025ல் மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்

விஜயவாடா - 99.60

திருவனந்தபுரம் - 99.32

சென்னை - 97.39

பெங்களூரு - 95.95

மேற்கு தில்லி - 95.37

கிழக்கு தில்லி - 95.06

சண்டீகர் - 91.61

பஞ்ச்குலா - 91.17

புணே - 90.93

அஜ்மீர் - 90.40

புவனேஸ்வர் - 83.64

குவஹாத்தி - 83.62

டேராடூன் - 83.45

பாட்னா - 82.86

போபால் - 82.46

நொய்டா - 81.29

பிரயாக்ராஜ் - 79.53

மண்டல வாரியாக விஜயவாடா முதலிடத்திலும், திருவனந்தபுரம் இரண்டாமிடத்தையும், சென்னை மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

இதையும் படிக்க: குருப்பெயர்ச்சி பலன்கள் 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT