இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

DIN

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

கடந்த ஏப். 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கடந்த மே 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளின் ராணுவமும் மாறி மாறி தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தி அவற்றை முறியடித்தது.

இதையடுத்து இந்தியத் தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் மே 10-ம் தேதி மாலை 5 மணி க்கு போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், போர்ப் பதற்றம் காரணமாக இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் விமான சேவைகள் மே 15 வரை நிறுத்தப்பட்டது.

தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது.

எனினும் சில விமான நிறுவனங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளதாகவும் சில விமானங்கள் தாமதமாக புறப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லியில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று ஸ்ரீநகரில் தரையிறங்கியுள்ளதாகவும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதெல்லாம் சின்ன விஷயங்கள்... திவ்யா உர்துகா!

பூமியில் நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மேகம், மலை, நீர், நிலம்... ஷாமா சிக்கந்தர்!

மக்களுக்குப் பிடித்த சின்ன திரை நடிகை! விருது வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி!

அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT