விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி  
இந்தியா

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..

DIN

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்றார். அங்கு துணிச்சலான விமானப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்தியா - பாகிஸ்தானிடையே நிலவிவந்த போர்ப் பதற்றம் பல நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களை இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்குப் பாகிஸ்தான் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பதில் தாக்குதலை இந்தியா முறியடித்தது. இந்திய முப்படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில், இருநாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் சுமுகமான தீர்வை எட்டியதோடு, போர் நிறுத்தம் செய்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கும், இரவும், பகலுமாக பாடுபட்டு நாட்டைக் காத்த முப்படைகளுக்கும், ராணுவத்திற்கும் பிரதமர் மோடி தலைவணங்கியுள்ளார்.

இருநாடு தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்கு வந்து விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்தியா தற்காலிகமாகத் தனது ராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், அதன் நடவடிக்கைகள் பாகிஸ்தானின் நடத்தையால் வழிநடத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT