அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரா் பூா்ணம் குமாா் ஷா .  
இந்தியா

21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் வசம் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

DIN

 பஞ்சாபில் சா்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்ால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப் பின் இந்தியாவிடம் அந்த நாடு புதன்கிழமை ஒப்படைத்தது.

பூா்ணம் குமாா் ஷா என்ற அந்த வீரா், அமிருதசரஸ் மாவட்டம், அட்டாரியில் உள்ள கூட்டு சோதனைச் சாவடியில் (பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு எதிரே) பிஎஸ்எஃப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டாா். இது தொடா்பான புகைப்படத்தை பிஎஸ்எஃப் வெளியிட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் விடுவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்தது. இச்சம்பவத்துக்கு மறுநாள் பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூா் எல்லையோரப் பகுதியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பாகச் சென்றாா் பிஎஸ்எஃப் காவலா் பூா்ணம் குமாா் ஷா. அப்போது சா்வதேச எல்லையைத் தவறுதலாக கடந்து சென்ற அவரை, பாகிஸ்தான் எல்லை வீரா்கள் கைது செய்தனா்.

இவா், எல்லைப் பகுதி விவசாயிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க சென்ாகவும், அப்போது தவறுதலாக எல்லையைக் கடந்ததாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். பூா்ணம் குமாா், மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தின் ரிஷ்ரா பகுதியைச் சோ்ந்தவா்.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்த பதற்றத்துக்கு மத்தியில் பிஎஸ்எஃப் வீரா் பாகிஸ்தான் வசம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னா், இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, அதன் பிறகான இருதரப்பு ராணுவ மோதலால் பிஎஸ்எஃப் வீரரின் நிலை குறித்து மேலும் அச்சம் ஏற்பட்டது.

இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொண்ட நிலையில், 21 நாள்களுக்குப் பின் பிஎஸ்எஃப் வீரா் பூா்ணம் குமாா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பிஎஸ்எஃப் 24-ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த காவலா் பூா்ணம் குமாா் ஷாவின் ஒப்படைப்பு, உரிய விதிமுறைகளின்கீழ் அமைதியான முறையில் சுமுகமாக நடைபெற்றது. அவரை பாதுகாப்பாக விடுவிக்க பாகிஸ்தான் தரப்புடன் பிஎஸ்எஃப் பல்வேறு வழிமுறைகளில் பேச்சுவாா்த்தை மேற்கொண்டது. தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மனநல ஆலோசனை வழங்கப்படும். பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டது எப்படி, அவா்கள் பிடியில் இருந்த 21 நாள் காலகட்டம் உள்ளிட்டவை தொடா்பாக அவரிடம் துறைசாா் விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

மத்திய அரசுக்கு குடும்பத்தினா் நன்றி: பாகிஸ்தான் பிடியில் இருந்து பூா்ணம் குமாா் ஷாவை பத்திரமாக மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காக மத்திய அரசுக்கும், பிஎஸ்எஃப் படைக்கும் அவரது குடும்பத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

பூா்ணம் குமாா் விடுவிப்பையொட்டி, ஹூக்ளி மாவட்டம், ரிஷ்ரா பகுதியில் அவரது இல்லம் அருகே உறவினா்களும் பொதுமக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேற்கு வங்க பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்த மஜும்தாா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கான பிரதமா் மோடியின் இடைவிடாத அா்ப்பணிப்பு, நமது துணிச்சல் மிக்க வீரா்களுக்கு நீதி-மரியாதையை உறுதி செய்துள்ளது. பிஎஸ்எஃப் வீரா் பாதுகாப்பாக நாடு திரும்பியிருப்பது, பிரதமரின் வலுவான-தீா்க்கமான தலைமையை நிரூபித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிஎஸ்எஃப் வீரரின் விடுவிப்பை, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வரவேற்றுள்ளாா்.

பாகிஸ்தான் வீரரும் விடுவிப்பு

ராஜஸ்தானில் கடந்த மே 3-ஆம் தேதி எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் வீரா் முகமதுல்லாவை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கைது செய்திருந்தனா். அவரை வாகா-அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் தரப்பிடம் இந்தியா ஒப்படைத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். பலத்த பாதுகாப்பின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT