கோப்புப்படம் 
இந்தியா

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் ராஜ்நாத் சிங்!

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீர் பயணம்.

DIN

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை இரவு இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது.

இருப்பினும் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் செல்லும் அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை நிலவரம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT