ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் 2 முகாம்கள் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலங்கீரின் கந்தாமார்தன் மலைப்பகுதி மற்றும் சத்ராதண்டி வனப்பகுதிகளில், பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (மே 15) சோதனைகள் மேற்கொண்டனர்.
மாவட்ட தன்னார்வப் படை (DVF), மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (SOG) ஆகிய படைகள் மேற்கொண்ட இந்தச் சோதனைகளில் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்டுகளின் முகாம்கள் அடையாளம் காணப்பட்டன.
ஆனால், பாதுகாப்புப் படையினரின் வருகைக்கு முன்னரே அங்கிருந்த மாவோயிஸ்டுகள் தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த முகாம்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அங்கிருந்து ஏராளமான வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்புகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அடர்ந்த காடுகள் நிரம்பிய அப்பகுதியின் வழியாக அங்கு செயல்படும் மாவோயிஸ்டுகள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இடையில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.