மைசூர் அரச குடும்பத்தினர் நன்கொடை 
இந்தியா

திருப்பதி கோயிலுக்கு.. மைசூர் அரச குடும்பத்தினர் 100 கிலோ வெள்ளி விளக்கு நன்கொடை!

வெள்ளி அகண்டங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார் பக்தர் ஒருவர்.

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 100 கிலோ எடையுள்ள வெள்ளி விளக்கை நன்கொடையாக வழங்கியுள்ளார் பக்தர் ஒருவர்.

பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானிடம் வேண்டுதல்கள் வைப்பதும், அது நிறைவேறியவுடன் காணிக்கை செலுத்துவதும் வழக்கம். அதுமட்டுமின்றி நன்கொடையாகவும் பெருமாளுக்குப் பலர் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருள்களைக் காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரமோதா தேவி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுமார் 100 கிலோ எடையுள்ள இரண்டு வெள்ளி அகண்டங்களை (விளக்குகள்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு வெள்ளி விளக்கும் சுமார் 50 கிலோ எடையுள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை கோயிலில் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் பிரமோதா தேவி கோயில் அமைப்பின் தலைவர் பி.ஆர். நதியு மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி முன்னிலையில் அகண்டங்களை ஒப்படைத்தார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கையின்படி, கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் மன்னரும் அகண்டங்களை நன்கொடையாக அளித்துள்ளார். அகண்ட விளக்குகள் கருவறைக்குள் ஏற்றப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT