வங்கக் கடலில் நிலநடுக்கம்...!
வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவாகியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கக் கடல் பகுதியில், கடலுக்கடியில் இன்று (மே 20) மாலை 3.15 மணியளவில், 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆழம் குறைந்த நிலநடுக்கமாக இது இருப்பதால் பின் அதிர்வுகள் ஏதேனும் ஏற்படுமா? என அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement
இருப்பினும், இதனால் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதற்கான செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, நேற்று (மே 19) மியான்மர் நாட்டுக்கு அருகிலுள்ள வங்கக் கடல் பகுதியில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேபாளத்தில் நிலநடுக்கம்! ஒரே ரிக்டரில் தொடரும் அதிர்வுகள்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.