டாடா ஹாரியர் இவி.. 
இந்தியா

ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் இவி! என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் இவி காரைப் பற்றி...

DIN

டாடா ஹாரியர் இவி கார் வருகிற ஜூன் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் வானங்களுக்கு மாற்றாகவும், அதே சமயத்தில் அவற்றுக்குப் போட்டியாகவும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் தங்களுக்கென தனி மவுசு பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி இவி கார்களுக்கு மத்திய அரசிடம் விதிவிலக்கு அளிக்கப்படுவதாலும், பெரும்பாலானோர் அதனை விரும்புகின்றனர்.

இந்தியாவில் ஆட்டோமொபைல்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நிறுவனமான டாடா தனது, ஹாரியர் இவி காரின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் இந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கியமானவற்றை இங்கு காண்போம்.

இதற்கும் முன்னதாக வந்த இவி கார்களைப் போலவே ஒமேகா பிளாட்ஃபார்ம்களைக் கொண்டு, அதன் தளம் மற்றும் பேட்டரி தளங்களில் சிறிது மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஜெனரேசன் 2 ஆக்டி. ஆர்க்கிடெக்சர் என டாடா நிறுவனம் பெயரிட்டுள்ளது. இது டாடாவில் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TATA Curvv-வை விட பெரியளவிலான பேட்டரியைக் கொண்டிருக்கிறது. மேலும், அதிக முடுக்குவிசைத் திறனையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் வகையிலும், வெளிப்புறத் தோற்றம் மற்றும் வடிவமைப்பு, அதன் வகையிலான டீசல் கார்களை ஒத்த வடிவமைப்பில் இருக்கிறது.

இதன் விலை; ரூ.24 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது Hyundai Creta EV, MG ZS EV, Kia Carens EV, இனி வரக்கூடிய Maruti e-Vitara ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மாற்றுவீரர்களாக மும்பை அணியில் இணையும் நட்சத்திர பட்டாளம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

SCROLL FOR NEXT