இந்திய எல்லைப்பகுதி (கோப்புப் படம்) 
இந்தியா

எல்லையில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் கைது!

சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது..

DIN

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை சர்வதேச எல்லையைத் தாண்ட முயற்சித்த நபரின் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் கவனித்துள்ளனர். உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர்.

அமிர்தசரஸில் உள்ள கரிம்புரா கிராமத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலிருந்து பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைக்காக அவர் உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவியது. பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருநாட்டுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 3 நாள்களில் போர் நிறுத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT