ராமன் அரோரா  
இந்தியா

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்தவர் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோரா. இவர் ஊழலில் ஈடுபட்டதற்காக கூறி ஜலந்தர் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதையடுத்து ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் அரோரா இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!

நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோத அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மிரட்டி பணம் பறித்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆரோராவின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட பதிவில், ‘ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT