கோப்புப்படம் 
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 1,000-யைத் தாண்டியது! மாநில வாரியாக விவரம்!!

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பற்றி...

DIN

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-யைத் தாண்டியதாக மத்திய சுகாதாரத் துறை தகவல்தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கேரளம், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று(மே 26) காலை 8 மணி நிலவரப்படி கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டில் தற்போது 1,009 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கு உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 209 பேர், தில்லியில் 104, குஜராத்தில் 83, தமிழ்நாட்டில் 69, கர்நாடகத்தில் 47 , உத்தரப் பிரதேசத்தில் 15, ராஜஸ்தானில் 13, மேற்கு வங்கத்தில் 12, ஹரியாணா, புதுச்சேரியில் தலா 9, ஆந்திரத்தில் 4, மத்தியப் பிரதேசத்தில் 2, சத்தீஸ்கர், கோவா, தெலங்கானாவில் தலா ஒருவர் என மொத்தம் 1,009 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளத்தில் 2 பேர், மகாராஷ்டிரத்தில் 4 பேர், கர்நாடகத்தில் ஒருவர் கரோனா பாதிப்பால் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!

அழகிய லைலா... நிகிலா விமல்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

SCROLL FOR NEXT