கோப்புப்படம்.  
இந்தியா

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை! ஒரே ஆண்டில் 15-ஆவது மரணம்

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவி ஜீஷான்(18). இவர் கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர். இந்த ஆண்டில் கோட்டாவில் நடக்கும் 15வது சம்பவம் இதுவாகும்.

அதேசமயம் இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது சம்பவமாகும். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ஜீஷான் தனது உறவினரிடம் அதுகுறித்து தெரிவித்திருக்கிறார். உடனே அவர் அதே மாடியில் வசித்து வந்த மற்றொரு மாணவி மம்தாவை அழைத்து, ஜீஷானை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

அவர் சென்று பார்த்தபோது ஜீஷானின் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து திறந்தபோது ஜீஷான் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஜீஷான் ஒரு மாதத்திற்கு முன்பு கோட்டாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்காக பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்தார். பிறகு அவர் தனியாகவே நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இவ்வாறு தெரிவித்தனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

SCROLL FOR NEXT